Aadhar card is no longer valid, shocking news!
ஆதார் அட்டை இந்திய குடிமக்கள் அனைவருக்குமான முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதுபோன்ற நிலையில் வெளிச் சந்தையில் கிடைக்கும் ஆதார் பிவிசி அட்டைகள் (Aadhaar PVC card) செல்லாது என ஆதார் ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிச் சந்தைகளில் விற்பனையாகும் ஆதார் பிவிசி கார்டுகளை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் ஆதார் ஆணையம் கோரியுள்ளது. எனினும், ஆதார் பிவிசி கார்டு தேவைப்படுவோர் நேரடியாக ஆதார் ஆணையத்திடம் விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளலாம்.
இது தொடர்பாக, ஆதார் ஆணையம், “வெளிச் சந்தைகளில் விற்பனையாகும் பிவிசி/பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் செல்லாது. வெளிச் சந்தை பிவிசி ஆதார் கார்டுகளை நாங்கள் ஊக்குவிப்பதுமில்லை என்றும், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதார் பிவிசி கார்டு அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொள்ளலாம்” என்றும் தெரிவித்துள்ளது.
பிவிசி ஆதார் கார்டு பெற விரும்புவோரு ஆதார் இணையதளத்துக்கு சென்று அதில் உள்ள 'Order Aadhaar PVC Card' பிரிவில் 12 இலக்க ஆதார் எண் பதிவிட்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம். 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஸ்பீடு போஸ்ட் வழியாக உங்கள் வீட்டுக்கே அனுப்பப்படும்.
மேலும் படிக்க
மக்களின் கணக்கில் ரூ.974 கோடி மாற்றப்படும், மோடி அரசின் பெரிய முடிவு
Share your comments