தமிழகத்தில் கோடை கால வெப்பம் சுட்டெரித்து நிலையில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மேலும், நேற்று முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை (Southwest monsoon) தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், தேனி ,திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை (23-05-2021) கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள், தேனி, கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் (Meteorological Center) தெரிவித்துள்ளது.
வருகின்ற 24ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 25ஆம் தேதி கன்னியாகுமரி ,தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மழை தொடரும்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம்! இரத்த நிறத்தில் நிலா!
பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Share your comments