தமிழக முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளின் பட்டியலை அனுப்ப வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட மேலும் ஐந்து புதிய திட்டங்களைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்து இருப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளதாகவும், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பானது சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள்,இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலைகள், மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேவைப்படும் உட்கட்டமைப்புப் பணிகள் குறித்த பல்வேறு விதமான பணிகளை பரிந்துரைக்கலாம் என கூறியுள்ளார்.
இத்தகைய செயல்பாடுகளை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குப் சட்டமன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
தமிழில் மட்டுமே இனிஷியல் மற்றும் கையொப்பம் இட வேண்டும்- பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
Share your comments