சென்னையில், தங்கம் விலை ஒரு வாரத்தில் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களை, கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டு வருகிறது.
தொடரும் போர்
உக்ரைன்-ரஷ்யப் போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. போர் 9 மாதங்களைக் கடந்துவிட்டநிலையில், போர் பதற்றம் காரணமாக, பெரும்பாலும் விலை அதிகரித்து வருகிறது. இருப்பினும் தீபாவளி பண்டிகையின்போது தங்கத்தின் விலையில் சற்று சரிவு காணப்பட்டது இது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது.
ரூ.1280
இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 1280 ரூபாய் அதிகரித்துள்ளது.
ரூ.60 சரிவு
2 நாட்களில் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, இன்று ஒரு கிராம் தங்கம் 4,875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 39,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று, ஒரு கிராம் தங்கம் 4,820 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 38,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
திருமண சீசன்
முன்னதாக கடந்த 3ம்தேததி ஒரு சவரன் தங்கம், 37,720ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4,715 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருமண சீசனில், தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, தங்க நகை வாங்குவோரை கவலை அடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments