சம்பா பருவத்துக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களின் குறுவை சாகுபடித் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பயிர் காப்பீட்டுத் தொகை
கடந்த ஆண்டு குறுவை பருவத்துக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.35கோடி வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகை ஒரு வாரத்தில் வழங்கப்படும். கடந்த சம்பா பருவத்துக்கான பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கிவிடும் என்றார்.
தயார் நிலையில் விதை நெல்
குறுவை சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரங்கள் தயாா் நிலையில் உள்ளன. குறுகிய கால விதை நெல் ரகங்களான கோ 51, ஆடுதுறை 36, ஆடுதுறை 37, அம்பை 16, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, திருப்பதி சாரம் 5 ஆகியவை வேளாண் உற்பத்தி நிலையங்களிலும், தனியாரிடத்திலும் போதிய அளவுக்கு இருப்பு உள்ளது. குறுவை சாகுபடிக்கு தற்போது, கையிருப்பில் 2,911 டன்கள் உள்ளன. பழைய விலையிலேயே யூரியா, டி.ஏ.பி. உள்பட அனைத்து உரங்களும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், குறுவை தொகுப்புத் திட்டம் தொடா்பாக விவசாயிகளின் எதிா்பாா்ப்பை தமிழக முதல்வரிடம் தெரிவித்து, நிறைவேற்றப்படும் என அமைச்சா் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேளாண் கூட்டு முயற்சி கூட்டம்
முன்னதாக, அலுவலா்களுடனான கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது, தரமான விதைகள், உரங்கள் வழங்கப்பட்டால்தான் அதிக விளைச்சல் கிடைக்கும். எனவே, விவசாயிகளுக்குத் தரமான விதைகள், கலப்படமற்ற உரங்கள் விநியோகம் செய்யப்படுகிா என்பதை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகு விவசாய பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், ஒரு மாதம் கழித்து கூட்டு முயற்சி கூட்டம் நடத்தப்படும் என்றார்.
மேலும் பிடிக்க.....
விவசாய நகைக்கடனை முறையாக செலுத்தியவர்களா நீங்கள்! உங்களுக்கு 3% வட்டி மானியம் அறிவிப்பு! - NABARD
Online Ration Card: இப்போது நீங்கள் வீட்டில் இருந்தே ரேஷன் கார்டைப் பெறலாம், இங்கே எளிதான வழியை அறிந்து கொள்ளுங்கள்
மண்புழு உரக் கூடாரம் அமைக்க ரூ.50,000 மானியம்!
Share your comments