பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கரும்பு அறுவடையொடு இணைந்த வெள்ளம் தயாரிப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
தமிழகத்தில் களைகட்டவரும் பொங்கல் பண்டிகையொட்டி அதன் முக்கிய அங்கங்களான கரும்பு, மஞ்சள் அறுவடையும், மண்பானை, வெல்லம் தயாரிப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வெல்லம் தயாரிப்பு
இப்பகுதிகளில் விளையும் கரும்புகள் அனைத்தும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள 300-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அச்சுவெல்லம், குண்டு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது.
வெல்லம் ஏலம்
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெல்லம் ஏலம் விடப்படுகிறது. வெல்லத்தை ஏலம் எடுக்க உள்ளூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது.
பொங்கல் தொகுப்பில் வெல்லம்?
கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்காமல் சர்க்கரை, ஏலக்காய், பச்சரிசி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ரூ.2500 ரொக்கப் பணமும், முழு கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்து வழங்கி வருகிறது. இதனிடையே, பொங்கல் தொகுப்பு வழங்கும் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்து வினியோகம் செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வெல்ல தயாரிப்பாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read more...
விவசாயிகள் போரட்டம் : மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!!
திலேப்பியா மீன் வளர்த்து லாபம் பார்க்கலாம் வாங்க!!
பால் முதல் நெய் வரை அனைத்திலும் லாபம் சம்பாதிக்கலாம் - பசு மாடு வளர்ப்பு!
Share your comments