விருதுநகர் சந்தையில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.345 ஆக விற்கப்படுகிறது.
விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த மாதம் லிட்டர் ரூ.295 ஆக இருந்த நல்லெண்ணெய் ரூ.50 உயர்ந்து ரூ.345 ஆக விற்கப்படுகிறது. ரூ.195 ஆக இருந்த கடலை எண்ணெய் ரூ.30 உயர்ந்து ரூ.225 ஆக விற்கப்படுகிறது. ரூ.130க்கு விற்கப்பட்ட பாமாயில் ரூ.30 குறைந்து ரூ 100 ஆக விற்கப்படுகிறது. ரூ.175 ஆக விற்கப்பட்ட சன்பிளவர் ஆயில் ரூ.30 குறைந்து ரூ.145 ஆக விற்கப்படுகிறது.
வணிக வட்டாரத்தினர் தெரிவித்தபடி உற்பத்தி மற்றும் விற்பனைஅடிப்படையில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் எள், கடலை தட்டுப்பாட்டால் சமையல் எண்ணெய் விலை மேலும், உயர வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. தமிழகத்தில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து உள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மேலும் படிக்க:
Share your comments