கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம். இனி வரும் இரண்டு நாட்களுக்கு, 13 மாவட்டங்களில் இயல்பை விட, வெப்பநிலை (Temperature) அதிகரிக்கும் என, சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு
இன்றும், நாளையும், 13 மாவட்டங்களில் இயல்பை விட, அதிகபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும். அதாவது, மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அனல் பறக்கும்.
நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரை மற்றும் வேலுாரில், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. திருச்சியில் 40, சென்னை, கடலுார், கரூர் பரமத்தி, துாத்துக்குடியில் 39, நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், புதுச்சேரியில் 38, காரைக்காலில் 37, தர்மபுரியில் 36, கோவையில் 35, கன்னியாகுமரியில் 33, கொடைக்கானலில் 20 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் (Puviyarasan) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதைச்சான்று உரிமம் பெறாத தென்னங்கன்றுகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்! வேளாண் அதிகாரிகள் யோசனை!
முடிகிறது அக்னி
இதற்கிடையில், அக்னி நட்சத்திரம் (Agni Star) என்ற, கத்திரி வெயில் காலம் இன்று முடிகிறது. இந்த மாதம், 4ம் தேதி கத்திரி வெயில் துவங்கியது. அக்னி நட்சத்திர காலத்தில், பல மாவட்டங்களில், கோடை மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
அளவுக்கு அதிகமாக நீராவி பிடித்தால் கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படும்! மருத்துவர் எச்சரிக்கை!
கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!
Share your comments