இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகுகிறது, வெயிலின் கொடூர தாக்கத்தை சமாளிக்க சில சூப்பர் டிப்ஸ்களை காணலாம். வெயிலின் தாக்கம் வெளியே செல்லும் மக்களை வாட்டி வதைக்கும் ஒரு விஷயமாகும். அதுவும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் என்பது வெப்பமும் சூடும் அதிக அளவில் இருக்கும்.
எல்லா வருடமும் சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் பெறும் வேளையில்,சூரியனின் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கத்திரி வெயில் இன்று முதல் அதாவது மே 4 ஆம் தேதி தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனுடைய வீரியம் அதிகரிக்கும். உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். மேலும் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில்தான் கோடைக் காலத்தில் மிக அதிக வெப்பம் உணரப்படும்.
தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே பல நகரங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டு வருகிறது. இந்த 24 நாட்களும் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால் வெயில் கடுமையாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை வட மாநிலங்களிலேயே இந்த காலகட்டத்தில் வெயில் அதிகமாக இருக்கும்.
மேலும் படிக்க
Share your comments