சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஆர். பி. உதயகுமார், ” விவசாய கடன் மற்றும் நகை கடன்கள் இன்னும் ரத்து செய்யப்படவில்லை, ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகியும் இன்னும் ஏன் ரத்து செய்யப்படவில்லை என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின்:
“ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் வெள்ளையறிக்கை ஏதோ தேர்தல் நேரத்தில் திமுக வழங்கி இருக்கக்கூடிய உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே பின் வாங்குவதற்கான முயற்சி என்ற பொருள்பட அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் எடுத்து பேசினார். நேற்றைக்கு முன்தினம் நூறாவது நாள் காணக்கூடிய இந்த ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்து பலர் இந்த அவையிலேயே பேசியபோது போது கூட எந்த காரணத்தைக் கொண்டும் நாங்கள் அளித்திருக்கக்கூடிய வாக்குறுதியில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டோம் என்று சொன்னேன்.
உறுதியாக சொல்கிறேன் வெள்ளை அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது .நிதிநிலை அறிக்கையில் கூட நிதி அமைச்சர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார். அந்த நகை கடன் வழங்க வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. விவசாய பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யும்போது அதில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளன. அதையெல்லாம் முறையாக சரி செய்து அதன் பிறகு நிச்சயமாக வழங்கப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
உங்கள் ஆட்சி நடைபெற்ற நேரத்தில் நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீங்கள் தந்த வாக்குறுதிகளை உறுதிமொழிகளை நாங்களும் மறக்கவில்லை. நாட்டு மக்களும் மறக்கமுடியாது.அவற்றில் சிலவற்றை நிறைவேற்றியிருக்கிறீர்கள் இன்னும் பலவற்றை நிறைவேற்ற வில்லை.
விவசாயிகளின் பயிர்க்கடனை பொருத்தவரையில் அதேபோன்று நம்மைப் பொறுத்தவரையில் எங்கெங்கும் முறைகேடு நடந்துள்ளது என்பதும் எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பதும் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசுகிற போது நிச்சயமாக அவை குறித்து ஆதாரபூர்வமாக உங்களிடத்திலே எடுத்துச் சொல்வார் என்று நான் தெரிவிக்க விரும்புகிறேன் என்று ஸ்டாலின் பதிலளித்தார்.
மேலும் படிக்க:
ஆகஸ்ட் 15 சுதந்திரமடைந்த 5 நாடுகள்!
Share your comments