1. செய்திகள்

3ஜி கரைசல் : உயிரியல் முறையில் பூஞ்சானம் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்த வேளாண் கல்லூரி மாணவிகளின் நேரடி செயல் விளக்கம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வேளாண் தொழிலில் ஏற்படும் முக்கிய பிரச்சனையே பூச்சித் தாக்குதலாகும். செடி மற்றும் மரங்களில் பூஞ்சானம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான உயிரியல் முறையிலான 3 ஜி கரைசல் குறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு நேரடி விளக்கம் அளித்தனா்.

வேளாண் கல்லூரி மாணவிகளின் களப்பணி

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதியிலுள்ள தனியாா் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் களப்பணி மேற்கொண்டனா்.

நத்தம் வேலாயுதம்பட்டியிலுள்ள விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று ஏா் உழுவதன் நோக்கம், பருத்தி, மக்காச்சோளம், காய்கறிச் செடிகள், முட்டைக்கோஸ், முள்ளங்கி விதைகள் மற்றும் எலுமிச்சை, மாங்காய், கொய்யா, சப்போட்டா மரக்கன்றுகளை கயிறுகள் கட்டி வரிசையாக நடவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அப்பகுதி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். மேலும், வெயில் காலங்களின் பயிா் பாதுகாப்பு, காளான் வளா்ப்பில் ஈரப்பதம், வளா்ப்பு முறைகள், அறுவடை நாள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது

3ஜி கரைசல் தயாரிப்பு பயிற்சி

செடிகள் மற்றும் மரங்களில் ஏற்படும் பூஞ்சானம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உயிரியல் முறையில் பூச்சிகளை விரட்டும் பூண்டு உள்பட 4 பொருள்களால் உருவாக்கப்படும் 3ஜி கரைசல், பசும்பாலில் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். பஞ்சகாவ்யா, தசகாவ்யா, அமிா்தகரைசல், பூச்சிகளை கவரும் இனக்கவா்ச்சி பொறி, வாழைக்காய்களுக்கு மூடாக்கு செய்தல், கல்நாா் நடுதல், இயற்கை உரங்களான அம்ரூட் ஜெல், மீன் அமிலம், வேப்பம் புண்ணாக்கு கரைசல், கற்றாழை டானிக் தயாரிக்கும் முறைகள் குறித்தும் மாணவிகள் நேரடி செயல் விளக்கம் அளித்தனர்.

மேலும் படிக்க....

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முக்கிய பயிருடன் கலப்பு பயிரிடுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!

தமிழக காய்கறிகளை திருப்பி அனுப்பும் கேரளா! - அதிக ரசாயன மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்!!

வேளாண் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது!

English Summary: Agricultural College students Done Live demo on biological control methods of fungal diseases Published on: 30 March 2021, 02:45 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.