1. செய்திகள்

ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Agricultural loan waiver up to Rs.3 lakh!

தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலை சிலிண்டர் மக்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ள நிலையில், 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்திருப்பது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படியொரு நாள் வருமா என இல்லத்தரசிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடன் தள்ளுபடி

தேபோல், விவசாயிகள் வாங்கியுள்ள ரூ.3 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் அந்த மாநில மக்களுக்குதான்.

ரூ.500க்கு சிலிண்டர்

விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள குஜராத்திற்கு சென்றுள்ள ராகுல், பூத் மட்டத்திலான கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியபோது, இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதாவது குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு காஸ் சிலிண்டர், 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகள் கடன் தள்ளுபடி, 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சி எம்.பி., ராகுல் கூறினார்.

வேலைவாய்ப்பு

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம், 3 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கட்டப்படும் என அடுத்தடுத்து அறிவிப்புகளையும் ராகுல்காந்தி வெளியிட்டார்.

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில், இவ்வாறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியிடப்படுவது வாடிக்கை என்றபோதிலும், பொதுமக்களிடையே எதிர்பார்ப்பும் உருவாகாமல் இல்லை. 

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: Agricultural loan waiver up to Rs.3 lakh! Published on: 05 September 2022, 09:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.