வெயிலின் பாதிப்பில் இருந்து தென்னை மரங்களை காக்க மூடாக்கு முறையை பின்பற்ற வேண்டும் என வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது
நீர் மேலாண்மை அவசியம்
தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இது வரும் மே மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை முறைகளை விவசாயிகள் கையாள வேண்டும் என்று வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் ஆற்றுப்பாசனம், வாய்க்கால் பாசனம் இல்லாமல் மானாவாரியாகவும், போர்வெல் நீரை மட்டுமே நம்பி விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மூடாக்கு முறையை பின்பற்ற அறிவுறுத்தல்
தண்ணீர் வசதி அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே, தென்னந்தோப்பு காணப்படுகின்றன. நடப்பு கோடை காலத்தில், தென்னந்தோப்புகளில் களை அதிகம் காணப்படும், பூச்சி மற்றும் நோய் பரவல் அதிகரிக்கும், தண்ணீர் தேவையும் அதிகமாக இருக்கும்.
எனவே, இவற்றை கட்டுப்படுத்த, நீர் மேலாண்மை முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும் சணப்பு, தக்கைப்பூண்டு கொளுஞ்சி விதை, பயிரிட்டு 45 நாள் வைத்து மடக்கி உழவு செய்ய வேண்டும், இவை தென்னைக்கு மூடாக்கு மற்றும் உயிர் உரமாக பயன்படும். மேலும், நீர் ஆவியாதல் தடுக்கப்படும்.மண்ணுக்கு தேவையான சத்துக்களை அதிகரிக்க உதவி செய்யும்.
அவிநாசி பகுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது தோட்டத்தில் சொட்டுநீர் பசனம் அமைத்துள்ளனர். எனவே, விவசாயிகள் பாசன முறைகளுக்கு சொட்டு நீரை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க.....
கொளுத்தும் வெயில்- தாகம் தீர்க்கும் நுங்கு அமோக விற்பனை!
PMKSY: 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்!
Share your comments