வேளாண் சட்டங்களை எந்த வடிவிலும் மீண்டும் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி உருவாக்கும் குழப்பத்தில் விவசாயிகள் யாரும் சிக்கிட வேண்டாம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதியளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், சில காரணங்களால் வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அடுத்துவரும் காலங்களில் முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.
சர்ச்சைப் பேச்சு (Controversial speech)
காங்கிரஸ் கட்சியோ மத்திய அரசு திரும்பப்பெற்ற வேளாண் சட்டங்களை வேறுவடிவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிவித்ததது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து பின்னர் நாடாளுமன்றத்திலும் மசோதா தாக்கல் செய்து திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஆனால், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மீண்டும் வராது (Not Come Back)
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்தியஅமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதி்ல் கூறியதாவது:
நாட்டின் விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். மத்திய அரசுக்கு வேளாண் சட்டங்களை திரும்பக் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளை மறைக்க எதிர்மறையான பிரச்சாரம் செய்து, விவசாயிகளைக் குழப்புகிறது. இந்த குழப்பத்தில் விவசாயிகள் சிக்க வேண்டாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க
1 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்: புதிய திட்டம் துவக்கம்!
பிரதமர் மோடி அறிவித்த உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்!
Share your comments