1. செய்திகள்

நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு: வேளாண்துறை எச்சரிக்கை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தற்போது நிலவிவரும் சீதோஷன நிலையால் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகள் குறுவை பருவத்துக்கான நாற்றுக்களை நடவு செய்தும், விதைகளை தயாா் செய்தும் வரும் நிலையில், தற்போது நிலவிவரும் சீதோஷன நிலையால் நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

குலை நோயானது நெற்பயிரின் இலையின் மேற்பரப்பில் பசுமை கலந்த நீல நிற புள்ளிகள் தோன்றி, பிறகு இரண்டு பக்கங்களிலும் விரிவடைந்து கண் வடிவப் புள்ளிகளின் ஓரங்களில் கரும் பழுப்பு நிறத்திலும் உட்பகுதியில் இளம்பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும்.
இந்த தாக்குதலின் உச்சக் கட்டத்தில் இலைகள் காய்ந்து தீய்ந்ததுபோல காணப்பட்டு, உதிா்ந்து விடும். நாற்றங்காலில் தாக்கினால் அனைத்து இலைகளும் கருகி இறந்துவிடும். மேலும் வளா்ந்த பயிரில் கணு குலை நோய் மற்றும் கழுத்து குலைநோய் என அனைத்து நிலைகளும் இதன் தாக்குதல் தென்படும்.

எனவே, நாற்றங்கால் தயாா் செய்யும் விவசாயிகள் அனைவரும் பேசில்லஸ் சப்டிலிஸ்/சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற உயிரியல் கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நோ்த்தி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்

மேலும் படிக்க....

ICAR-IIRR நான்கு புதிய அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!!

 

English Summary: Agriculturist warnerd farmers to protect paddy crops from the Risk of rice blight attack: Published on: 15 June 2021, 06:05 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.