காற்று வீசும் திசையை, வேகத்தை நன்கு புரிந்து கொண்டால், வானிலையை இன்னும் துல்லியமாக கணிக்கலாம். இதற்குத்தான், ஐரோப்பிய விண்வெளி முகமை, இ.எஸ்.ஏ., அண்மையில், 'இயோலஸ்' செயற்கைக்கோளை ஏவியது.
இயோலசில் உள்ள, 'அலாடின்' என்ற நவீன லேசர் கருவி, பூமி மீது லேசர் துடிப்புகளை அனுப்பும். அது, பூமியின் மேல் பட்டு திரும்பும் பாதையில் குறுக்கே வரும் காற்று, அந்த லேசர் கதிரில் மாறுதலை உண்டாக்கும்.
அந்த மாற்றத்தை அளப்பதன் மூலம் காற்றின் திசை, வேகம், வகைகள் போன்றவற்றை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணிக்க முடியும்.
Share your comments