நடப்புக் கல்வியாண்டில், அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காலக் கட்டத்திற்கு பிறகு, சுமார் 2 ஆண்டுகள் கழித்து, பள்ளிகள் நேற்று முதல் வழக்கம் போல் திறக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. நடப்பு 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டு நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளன.
உற்சாக வரவேற்பு
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டின் முதல் நாளான இன்று, பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் வரவேற்றனர்.
சனி விடுமுறை
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். எனினும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டுக்குள் கொரோனா
கடந்த 2 ஆண்டுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், கடந்த முறைத் தேர்வுகளுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, மாணவ- மாணவிகள் குறைந்த அளவிலான பாடத்திற்கு மட்டுமே தயாராக நேர்ந்தது.
ஆனால் இந்தக் கல்வியாண்டில், கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் கட்டுக்குள் இருப்பதால், முழுப்பாடத்திட்டத்தையும் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments