விவசாயிகளுக்கு பயிர் செய்ய ஏதுவாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளில் பயரி கடனை வழங்கி வருகிறது. தக்க நேரத்தில் உதவிடும் இந்த பயிர் கடனை அனைத்து முன்னணி வங்கிகள் வழங்கி வருகின்றன. அதை எவ்வாறு வாங்குவது, எப்படி வாங்குவது என அனைத்திற்கும் விடை கீழே தரப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான் என்பதை நாம் அறிவோம். ஆனால் நாட்டில் விவசாயிகள் விவசாயம் செய்யும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தரமான விதைகள் அல்லது உரங்களை வாங்க அவர்களிடம் பணம் இருப்பதில்லை. எனவே விவசாயிகளுக்கும் நிதி உதவி செய்ய பல்வேறு வங்கிகள் பயிர் கடனை வழங்கத் தொடங்கியுள்ளன.
பயிர் கடனின் அவசியம்
பயிர் கடன் என்பது அடிப்படையில் ஒரு குறுகிய கால கடனாகும், இது விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களால் வழங்கப்படுகிறது. மேம்பட்ட விதைகள், உரங்கள், இயந்திரங்கள் போன்ற பல்வேறு பொருட்களை வாங்க இந்த பயிர் கடனைப் பயன்படுத்தலாம். பயிர் உற்பத்திக்குப் பிறகு கடன் பொதுவாக ஒரே தவணையில் திருப்பிச் செலுத்தப்படுகிறது.
பயிர் கடன் வழங்கும் வங்கிகள்
நாடு முழுவதும், பின்வரும் வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர் கடன்களை வழங்குகின்றன
-
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)
-
ஐசிஐசிஐ வங்கி ( ICICI)
-
யூனியன் பாங்க் ஆப் இந்தியா (UBI)
-
ஐடிபிஐ வங்கி (IDBI Bank)
-
ஹெச்டிஃஎப்சி வங்கி (HDFC Bank)
-
அந்திரா வங்கி (Andhra Bank)
-
பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda)
-
பாங்க் ஆப் இந்தியா (Bank of India)
-
யூகோ வங்கி (UCO Bank)
-
ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)
-
அலகாபாத் வங்கி (Allahabad Bank)
-
பாங்க் ஆப் மாகாராஷ்டிரா (Bank of Maharashtra)
-
கனரா வங்கி (Canara Bank)
-
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் (Oriental Bank of Commerce)
-
பஞ்சாப் & சிந்து வங்கி (Punjab and Sind Bank)
-
பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)
-
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (Central Bank of India)
-
கார்ப்ரேஷன் வங்கி (Corporation Bank)
-
தேனா வங்கி (Dena Bank)
-
இந்தியன் வங்கி (Indian Bank)
-
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)
-
விஜயா வங்கி (Vijaya Bank)
-
சின்டிகேட் வங்கி (Syndicate Bank)
-
யுனைட்டட் பாங்க் ஆப் இந்தியா (United Bank of India)
பயிர் கடன் மட்டுமல்லாமல், மற்ற பல்வேறு தேவைகளுக்கும் வங்கிகள் விவசாய கடன்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ பயிர் கடன் (SBI Crop Loan)
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பயிர் உற்பத்திக்கான கடன்களை ஏ.சி.சி (ACC) அல்லது கே.சி.சி (KCC) வடிவத்தில் வழங்குகிறது. எஸ்பிஐ கடன் பின்வரும் விஷயங்களை உள்ளடக்கியது - பயிர் உற்பத்தி செலவுகள், அறுவடைக்கு பிந்தைய செலவுகள் மற்றும் இதர செலவுகள் போன்றவை. கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி - KCC) வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகிறது. கடன் பெற்ற விவசாயி அந்த கிசான் கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கலாம், உரங்கள் போன்ற பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
எஸ்பிஐ பயிர் கடனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள்
-
இது கே.சி.சி சேமிப்பு கணக்கில் கடன் நிலுவைக்கு ஏற்ப வட்டி வீதத்தை அளிக்கிறது.
-
அனைத்து கே.சி.சி கடன் வாங்குபவர்களுக்கும் இலவச ஏடிஎம் டெபிட் கார்டு
-
ரூ. 3 லட்சம் கடன் தொகைக்கு ஆண்டுக்கு 2% வட்டி மட்டுமே
-
கடன் உடனடி திருப்பிச் செலுத்த ஏதுவாக 3% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.
-
அனைத்து கே.சி.சி கடன்களுக்கும் அறிவிக்கப்பட்ட பயிர்கள் அல்லது அறிவிக்கப்பட்ட பகுதிகள் பயிர் காப்பீட்டின் கீழ் கொண்டுவரப்படும்.
இப்போதே நேரடியாக பயிர் கடன் பெற இங்கே கிளிக் செய்யவும்
பயிர் கடன் பெறத் தேவையான ஆவணங்கள்
-
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள்
-
அடையாளச் சான்றாக - வாக்காளர் அட்டை, பான் அட்டை, ஆதார் அட்டை, பார்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் - இவற்றில் ஏதேனும் ஒன்று
-
முகவரிச் சான்றாக - ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பார்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் - இவற்றில் ஏதேனும் ஒன்று
பயிர் கடன் பெறுவது எப்படி?
ஆஃப்லைன் செயல்முறை (Offline method)
மேலே குறிப்பட்ட வங்கிகளில், உங்கள் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்லவும். அங்கு, வங்கி வாடிக்கையாளர் சேவை பிரிவு நபரைத் தொடர்புகொண்டு பயிர் கடன் குறித்து கேட்டறியவும். அதன் படி எளிதாக பயிர் கடன் பெறலாம்.
ஆன்லைன் செயல்முறை (Online Method)
பயிர்கடன் பெற ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்ட வங்கிகளின் ஆதாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு, பயிர் கடன் குறித்து பகுதிகளில் சென்று விதிமுகளைப் பின்பற்றி பயிர்க்கடனை பெறலாம்.
மேலும் படிக்க...
தமிழக அரசின் "உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம்" - சிறப்பு அம்சங்கள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!
PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?
Share your comments