வரும் பிப்பரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக 'யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்' ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் பட்ஜெட் தொடர்பான அனைத்து வகையான ஆவணங்களையும் தகவல்களையும் இருந்த இடத்திலிருந்தே பெற முடியும்.
பட்ஜெட் ஆப் அறிமுகம்
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகம் அதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஹல்வா தயாரிக்கும் விழா (Halwa Ceremony) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, நிதியமைச்சர் 'மத்திய பட்ஜெட் மொபைல் பயன்பாட்டை' (Union Budget Mobile App)தொடங்கி வைத்தார்.
காகிதமற்ற பட்ஜெட்
இந்த மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம், காகிதமற்ற பட்ஜெட்(Budget)தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, பட்ஜெட் அச்சிடுதல் செய்யப்படவில்லை. 'யூனியன் பட்ஜெட் (Union Budget) மொபைல் ஆப்' மூலம், பொதுமக்கள் பட்ஜெட் தொடர்பான அனைத்து வகையான ஆவணங்களையும் தகவல்களையும் பெற முடியும்.
அனைத்தும் மின்னணு வடிவத்தில்...
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் பட்ஜெட் தாளை அச்சிட வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தவிர, பொருளாதார கணக்கெடுப்பின் அச்சும் இருக்காது. பொருளாதார ஆய்வு ஜனவரி 29 அன்று நாடாளுமன்ற அட்டவணையில் வைக்கப்படும். இந்த ஆண்டு இந்த இரண்டு ஆவணங்களும் மின்னணு வடிவத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
பட்ஜெட் 2021 Mobile App நன்மைகள்
இந்த மொபைல் பயன்பாட்டில் அனைத்து பட்ஜெட் ஆவணங்களும் உள்ளன. Annual Financial Statement, மானியங்களுக்கான தேவை (Demand for Grants, நிதி மசோதா போன்ற தகவல்கள் இதில் இருக்கும்.
இந்த பயன்பாட்டில் பதிவிறக்குதல், அச்சிடுதல், தேடல், பெரிதாக்க மற்றும் வெளியே, வெளிப்புற இணைப்பு போன்ற அம்சங்கள் உள்ளன.
-
இந்த பயன்பாடு ஆங்கிலம் (English) மற்றும் இந்தி (Hindi) இல் இருக்கும். இது Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கும்.
-
இந்த மொபைல் பயன்பாட்டை யூனியன் பட்ஜெட் வலை இணையதளமான www.indiabudget.gov.in இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
-
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரின் (Finance Ministry) பட்ஜெட் உரை முடிந்ததும், இந்த பயன்பாட்டில் பட்ஜெட் ஆவணங்கள் கிடைக்கும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி ஜனாதிபதியின் உரையுடன் தொடங்கும். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி அன்று தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இருக்கும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!
வேலையில்லாதவருக்கு அரசின் உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31
Share your comments