பொதுமக்களின் நலன் கருதி, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு குறைகிறது (The vulnerability decreases)
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம், அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால், படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இதையடுத்து, ஊரடங்கில் மேலும் சிலத் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டீக்கடைகள் இயங்கலாம் (Tea shops can run)
கொரோனாத் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டீக்கடைகள் நாளை முதல் இயங்கலாம். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இனிப்பகங்களுக்கு அனுமதி (Allow for Sweet Stals)
-
பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
-
இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
இ-சேவை மையங்கள் (E-Service Centers)
பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
அலுவலகங்கள் (Offices)
கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளைக் கருத்தில் கொண்டு கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
92 சதவீதம் பேர் மீண்டனர் (92 percent recovered)
இதனிடையே தமிழகம் முழுவதும் 23,39,705 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 21,48,352 பேர் குணமடைந்துள்ளனர்.92 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் 5,24,085 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5,06,454 பேர் குணமடைந்துள்ளனர். 97 சதவீதம் அளவுக்கு கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!
Share your comments