பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மானிய உதவி பெறுவதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. அதற்குள் விண்ணப்பித்து அரசின் மானிய உதவியுடன் வீடு கட்டி பயன்பெறுங்கள்...
அனைவருக்கும் வீடு
சொந்தமாக வீடு வங்க வேண்டும் என்பது நம்மில் பலரது கனவகா உள்ளது. இருப்பினும் தொடர்ந்து அதிகரிக்கும் விலையேற்றத்திற்கு மத்தியில், குறைந்த வருமானம் ஈட்டுபவர்களின் கனவு நிறைவேறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இந்நிலையில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரையும் சொந்த வீட்டில் அமர வைப்பதற்காகவே பிரதமரின் ஆவாஸ் யோஜனா என்றத் திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 2022ம் ஆண்டிற்குள் அனைவரும் வீடு என்பதே இந்தத் திட்டத்தின் இலக்கு. இதில் இரண்டு பிரிவுகள் உண்டு.
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதன் மூலம் வீடற்ற ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெறலாம். இதன்கீழ் கீழ் விண்ணப்பித்தால் ரூ.2.67 லட்சம் வரையில் மானிய உதவி பெறலாம்.
நாளைக்குள் விண்ணப்பித்திடுங்கள்
பிஎம் யோஜனா திட்டத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் கடனுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்துக்கான காலக்கொடு நாளையுடன் முடிவடைகிறது. மற்ற பிரிவுக்கான கடைசித் தேதி 2022 மார்ச் 31 வரை உள்ளது. இந்நிலையில் கொரோனா காலத்தில் கட்டுமானப் பணிகள் முடங்கியதால், வட்டி மானிய திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
யார் எல்லாம் பயன்பெறலாம்?
-
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
-
உங்களது ஆண்டு வீட்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ .6 லட்சம் வரை இருக்கவேண்டும்
-
உங்கள் ஆண்டு வீட்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருக்கலாம்.
-
உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ .12 லட்சத்துக்கு மேல் ஆனால் ரூ.18 லட்சத்திற்கு குறைவாக இருக்கவேண்டும்
-
வீட்டுக்கடன் பெற விரும்புபவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேறு ஒரு வீட்டை வைத்திருக்கக்கூடாது. அல்லது வேறு எந்த அரசாங்க வீட்டுத் திட்டங்களின் பலனையும் பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தில் இணைவதே முதல் முறையாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
http://pmaymis.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, ஆவணங்களை பதிவேற்றம் செய்து, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
Share your comments