மக்காச்சோளதின் பிறப்பிடம் அமெரிக்கா ஆகும். 16 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. தற்பொழுது இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பெருமளவில் பயிரிட படுகிறது. கோடை காலத்திற்கு ஏற்ற பயிராகும். குறைத்த அளவு நீர் தேவைப்படும். சொட்டு நீர் பாசனம் இதற்கு ஏற்றதாகும் .
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் பயிரிட ஏற்றதாகும்.
பயிரிட ஏற்ற பருவம்
ஜனவரி – பிப்ரவரி
ஏப்ரல் – மே
ஜீன் – ஜீலை
செப்டம்பர் – அக்டோபர்
நிலத்தை பண்படுத்துதல்
நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் தொழு உரம் இட்டு உழவு செய்து நிலத்தை தயார் படுத்த வேண்டும்.
விதையின் அளவு
ஏக்கருக்கு 6 கிலோ விதைகள் வரை பயன்படுத்தலாம்.
நீர் பாசனம்
விதை ஊன்றிய உடன் நீர் ஊற்ற வேண்டும். அதன் பின் சொட்டு நீர் முறையில் நீர் பாய்ச்சுவது போதுமானதாகும். பின்னர் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுவது போதுமானதாகும்.
அறுவடை
அறுவடைக்கான காலஅளவு 110 நாட்களாகும். 60 முதல் 70 நாட்களுக்குள் கதிர் விளைந்திருக்கும்.100 நாட்களில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகி இருக்கும். இந்நிலையில் நீர் பாசனத்தை நிறுத்த வேண்டும். பத்து நாட்கள் கழித்து அறுவடை செய்து கொள்ளலாம்.
படைப்புழு, கட்டுப்படுத்தும் முறை
தமிழகத்தில் தற்போது படைப்புழு தாக்குதல் அதிகமாக இருக்கிறது. இந்தப்புழுவானது இலை, குருத்து, பயிர் மற்றும் மண்ணுக்குள்ளும் சென்று செடியினை தாக்குவதால் கட்டுப்படுத்துவது என்பது சற்று சிரமமானது. இருப்பினும் பெவேரிய, பேசியான,மெட்டாரைசியம் , பேசில்லஸ் மற்றும் ன்.பி . வைரஸ், ட்ரைக்கோகிரம்ம, ஒட்டுண்ணி, பொறிவண்டுகள் போன்றவை படைப்புழுவினை கட்டுப்படுத்தும்.
மக்காச்சோளம் பயிரிடும் முன் ஒரு முறை உழவு செய்தல் இப்புழுக்கள் வெளிவரும், மற்ற உயிரினங்கள் அவற்றை உண்பதால் இயற்கையான முறையில் படைப்புழுக்கள் அழிந்து விடும்.
Share your comments