உலகில் முதன்முதலாக கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைக்கு (Tablet) பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
மாத்திரை
கொரோனாவை (Corona) தடுப்பதற்கு பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மாத்திரை (Tablet) எதுவும் இதுவரை எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவின் மெர்க்ஸ் நிறுவனம் கொரோனாவை குணப்படுத்தும் 'மால்னுபிரவிர்' மாத்திரையை தயாரித்துள்ளதாகவும், அதன் தரவு மற்றும் ஆய்வு முடிவுகளை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்திடம் (எப்.டி.ஏ.,) சமர்ப்பித்து அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பதாக சமீபத்தில் தெரிவித்தது.
தற்போது அவசரகால பயன்பாட்டுக்கு இம்மாத்திரையை பயன்படுத்த பிரிட்டனின் மருந்து, சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் (எம்.எச்.ஆர்.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார துறை செயலர் சஜித் கூறுகையில், 'இது பிரிட்டனுக்கு வரலாற்றில் முக்கியமான நாள். உலகின் முதல் நாடாக கொரோனா மாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளோம்' என்றார்.
ஐந்த நாட்களுக்கு இரண்டு வேளை:
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் கொரோனா பாதிப்பு உறுதியானவுடன் அல்லது அறிகுறி தோன்றியவுடன் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினம் இரண்டு வேளையாக இம்மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொரோனா அறிகுறியை குறைத்து தீவிரமடையாமலும், உயிரிழப்பு ஏற்படாமலும் தடுக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
தமிழகத்தில் புதிய வகை கொரோனா இல்லை: அமைச்சர் தகவல்!
கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல்!
Share your comments