Credit : Daily Thandhi
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று முன்தினம் மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. நேற்று வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்ப்பூசணி (Watermelon), நுங்கு, வெள்ளரிக்காய் ஆகியவை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இளநீர், மோர் ஆகியவற்றை வாங்கி பருகி வருகின்றனர்.
நுங்கு விற்பனை
கம்பம் நகரில் வ.உ.சி. திடல், கம்பம் மெட்டு சாலை பிரிவு, பார்க் திடல் உள்ளிட்ட பல்வேறு பிரதான வீதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்தது. இதில் ஒரு நுங்கு ரூ.10-க்கு விற்பனையானது. விலை அதிகமாக காணப்பட்டாலும் நுங்கில் மருத்துவ குணம் (Medical Benefits) அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதற்கு முக்கிய காரணம், வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்ககூடிய நுங்கு, மிகுந்த சுவை மிக்கதாகவும், வெயிலுக்கு இதமாகவும், மருத்துவ குணமுடையதாகவும் இருப்பதே.
தேனி மாவட்டத்தில் பனைமரம் (Palm Tree) குறைந்த அளவிலே காணப்படுகின்றன. ஆனாலும், கோடைகாலம் என்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது. பனைமரம் அதிகமாக உள்ள பகுதியான நெல்லை மாவட்டத்தில் இருந்து நுங்குகள் கொள்முதல் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது என்று நுங்கு வியாபாரிகள் கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நள்ளிரவில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை அறிய புதிய யுக்தி!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாசனை எண்ணெய்கள்!
Share your comments