வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவேத் தெரிவித்திருந்தது.
புயல் எச்சரிக்கை (Storm warning)
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே 10-ம் தேதி ஆந்திரா- ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே மீனவர்கள், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அசானி என பெயர் வைக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனவே ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள், புயலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.
மேலும் படிக்க...
இனி இவர்களுக்கு சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்- விபரம் உள்ளே!
ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!
Share your comments