தமிழகத்தில் நடப்பாண்டு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இன்று மாலை தேர்தல் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியும் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் (Assembly elections) நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா (Sunil Arora) தெரிவித்துள்ளார். அசாமில் மார்ச் 27, ஏப்ரல் 2, ஏப்ரல் 6 என் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும். புதுச்சேரியில் மற்றும் கேரளாவில் ஏப்ரல் 6-இல் தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 6 இல் தேர்தல்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டதால், இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் (Indian Election Commission) செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பலகட்டமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் இன்று ஐந்து மாநில தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அப்போது ‘‘தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. மே மாதம் 24-ந்தேதி தற்போதுள்ள ஆட்சிக்காலம் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 88,936 வாக்குப்பதிவு மையங்கள் (Polling centers) ஏற்படுத்தப்படவுள்ளது. இது, கடந்த தேர்தலை விட 34.73 சதவீதம் அதிகம். வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தும் தரைத்தலத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவு விடப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய தேதிகள்:
- வேட்புமனு தாக்கல் - மார்ச் 12 முதல் மார்ச் 19
- வேட்புமனுக்கள் பரிசீலனை - மார்ச் 20
- வேட்புமனு வாபஸ் கடைசி நாள் - மார்ச் 22
- வாக்குப்பதிவு நாள் - ஏப்ரல் 6
- வாக்கு எண்ணிக்கை நாள் - மே 2
விதிமுறைகள்:
- வேட்புமனு தாக்கலுக்கு 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
- இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
- வாக்கு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கும்.
- வேட்பாளர் (Candidate) 30.8 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதி. புதுச்சேரியில் 22 லட்சம் ரூபாய் செலவு செய்ய அனுமதி.
மே-2ம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடியிடம் முதல்வர் வேண்டுகோள்!
சேலம் தலைவாசலில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்காவின் சிறப்பம்சங்கள்!
Share your comments