வங்கிகளின் ஏ.டி.எம்., (ATM) சேவைக்கான கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்தக் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி யும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு (Tarrif Hike)
ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அந்த வங்கியின் ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரத்தில் மாதம் ஐந்து முறை கட்டணமின்றி நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை பெறலாம். அத்துடன் பிற வங்கிகளின் நகர்ப்புற ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், கிராமப்புற ஏ.டி.எம்.,களில் ஐந்து முறையும் இலவசமாக நிதி மற்றும் நிதி சாரா சேவைகளை பெறலாம்.
இந்த வரம்பிற்கு மேற்பட்ட ஒவ்வொரு சேவைக்கும் தலா 20 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 1 ரூபாய் உயர்த்தப்பட்டு, 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜி.எஸ்.டி.,யும் வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஏ.டி.எம்., மையத்தின் நிர்வாகச் செலவுகள் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டி, இந்த கட்டண உயர்வை ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ஆறரை ஆண்டுகளுக்கு பின், ஏ.டி.எம்., சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை: ரிசர்வ் வங்கி!
Share your comments