மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (upper air circulation) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மிதமான மழை (Moderate Rain)
அடுத்த 24 மணி நேரத்திற்கு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், திருச்ச, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
14.01 2021, 15.01.2021
தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச மழைஅளவு (Maximum Rain)
கடந்த 24 மணி நேரத்தில், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 28 சென்டிமீட்டரும், சேத்தியாத்தோப்பில் 21 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
13ம் தேதி குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதி, லட்சத்தீவு,மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் , சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதேபோல் 14ம் தேதி லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில், பலத்த சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.60,000பின்னேற்பு மானியம்!
கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள்- விற்பனைக்குத் தயார்!!
ஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்!
Share your comments