கோவையில் இருந்து பெங்களூரு வரை விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை, பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum) நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்டம்பர் 15ம்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
உடன்படிக்கை:
போராட்டம் நடத்திய விவசாயிகளுடன், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் ஒப்புதல் (Approval) இல்லாமல், விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் எதுவும் செய்யப்படாது என உடன்படிக்கை (Agreement) கையெழுத்தானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், விவசாயிகளுக்கு எதிராக பாரத் பெட்ரோலிய நிறுவனம், விளைநிலங்களில் அளவீடு பணியை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதனைக் கண்டு கவலையடைந்த விவசாயிகள், மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்தனர்.
கால்நடைகளுடன் போராட்டம்:
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர், பட்லூர் எளையாம் பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள், வருவாய் துறையினருடன் (Department of Revenue) வந்து விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி, விளைநிலங்களில் அளவீடு (Measurement) செய்யும் பணியினை மேற்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், உடன்படிக்கையை மீறிய பெட்ரோல் நிறுவனத்தின் செயலை கண்டித்து, அங்கு வயலில் இறங்கி கருப்பு கொடி ஏந்தியும், கால்நடைகளுடனும் (Livestock) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் வகையில், அரசு இத்திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச சட்ட உதவி! உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவிப்பு!
Share your comments