தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சம்பந்தப்பட்ட முக்கிய தகவல் ஒன்று உயர்மட்ட அதிகாரிகள் மூலம் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் அனைவரும் இது குறித்த தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TNPSC பாடத்திட்டம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுத்துறை தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அனைத்தும் முறையாக அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் அனைத்து வித முன்னேற்பாடுகளையும் பின்பற்றி நடத்தப்படுகிறது. வழக்கமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை TNPSC பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், TNPSC-ன் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வின் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவ்வாறு, மாற்றம் செய்யப்படும் பாடத்திட்டமானது மேம்பட்ட தொழில்நுட்ப அறிமுகத்துடன் வலுவான அடிப்படைகள் சமநிலையை உருவாக்கும் விதமாக அமைக்கப்படும் என்று TNPSC ன் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், அரசு தேர்வுகள் எந்த வித முறைகேடுகளுக்கும் இடமின்றி மிகவும் நேர்மையாக நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிகிறது. இதனால் TNPSC தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் படிக்க
சொந்தமாக தொழில் தொடங்குவோருக்கு ஆனந்த் மஹிந்திராவின் அறிவுரை!
தனியாருக்கு மாறும் பொதுத் துறை வங்கிகள்: எதிர்க்கும் அரசு ஊழியர்கள்!
Share your comments