இயற்கை விவசாயத்தில் அன்னாசி பழ சாகுபடியில் ஈடுபட்டு பல்வேறு விருதுகள் பெற்றுவரும் மலேசியாவை சார்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நவநீத்பிள்ளைக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நவநீத்பிள்ளை, துவக்கத்தில் கணினித்துறையில் வல்லுனரான இவர், தற்போது வணிகம் மேலாண்மை சார்ந்த பட்ட மேற்படிப்பு படித்திருந்தாலும், தலைநகர் கோலாலம்பூரில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி, அரசு பதிப்பகத்தார் பணியாற்றி, பெரிய வணிகர்களுக்கு ஸ்டேட்டஜிஸ்ட் ஆக பணிபுரிந்து அனுபவம் பெற்றுள்ளார்.
அன்னாசி பழங்கள்
புதிய வேலை வாய்ப்புகள் தேடி வந்தாலும் இயற்கையை நேசித்து ஆர்வம் கொண்டு விவசாயத்தில் ஈடுபட முடிவுசெய்தார். மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான உணவு வகைகளான காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் நாட்டம் கொண்டு, நடுத்தர குடும்பங்கள் முதல் மேல்தட்டு குடும்பங்கள் வரை விரும்பி வாங்கும் அன்னாசி பழங்கள் நடவுசெய்து வருகிறார்.
குறைந்த விலையில் துவங்கி அதிக விலை என ஏராளமான ரகங்கள் அன்னாசி பழத்தில் உள்ளது அத்துடன் மிகவும் ஆரோக்கியமானது. இவையனைத்தும் இயற்கையான முறையில் விவசாயம் செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் மிகச் சிறப்பாக செய்து வருகிறார். குறுகிய சில ஆண்டு காலத்தில் பல மணி நேர தொடர் கடுமையான விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வெற்றிபெற்றுள்ளார்.
மதிப்பு கூட்டுப்பொருள்கள்
அன்னாசி (MD2 ரகம்) பழ விவசாயத்தில் துவங்கி தொடர்ந்து வெற்றி கண்டு விவசாயத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தென்னை, மக்காச்சோளம் மற்றும் மிளகாய் விவசாயம் செய்து வருகிறார். இவையனைத்தும் NP Asia என்ற நிறுவனத்தை துவங்கி அன்னாசி பழத்தை மதிப்பு கூட்டுப்பொருள்களாக மாற்றி அன்னாசி பழச்சாறு உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். தென்னை விவசாயத்தில் தேங்காய் பால் உற்பத்தி செய்வதில், தென்னை சார்ந்த பொருட்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் கொண்டு அதில் ஈடுபட்டு வெற்றி கண்டு வருகிறார்.
Also Read | நெற்பயிரில் தண்ணீர் நிர்வாகத்தை எப்படி மேற்கொள்ளலாம்?
விவசாயம் சார்ந்த தொழில்
பழங்கள் மற்றும் விவசாய பொருட்களை மலேசியாவில் உள்ள வெளிமாநிலங்கள் விற்பனை செய்து வருகிறார். பல்வேறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்து வருகிறார். இந்திய வம்சாவளி இளைஞர் நவநீத்பிள்ளைக்கு மலேசிய மத்திய மற்றும் மாநில அரசு விருதுகள் 7 வழங்கி கௌரவித்துள்ளது. ஏசி அறையில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து கொண்டு வேலை செய்யும் போது கிடைக்காத நிறைவு தனக்கு பிடித்த விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால் மனநிறைவு கிடைப்பதாகவும் வாழ்க்கை முறை 360 டிகிரி தலைகீழாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த இளைஞர் நவநீத்பிள்ளை, படித்த இளைஞர்கள் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தற்போதைய இளைய தலைமுறையினர் இடையே விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகள் நாட்டம் குறைந்து காணப்படும் இக்காலத்தில், விவசாயம் செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதால் தொடக்கம் முதல் தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் சிறப்பாக செய்து வருகிறார். விவசாயத்தில் கொண்டுள்ள ஆர்வத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர்.
மேலும் படிக்க
தென்னையில் மகசூலை குறைக்கும் காண்டாமிருக வண்டு!
Share your comments