விளையாட்டுத்தனமாக வீட்டில் இருந்த ஃபிரிட்ஜின் பின்னால் சென்ற குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வினையான விளையாட்டு (Active game)
விளையாட்டு வினையாகும் என்பது நம் முன்னோர் வாக்கு. ஏனெனில், விளையாடுவதாக இருந்தாலும் கூடி, கூடுதல் கவனத்துடனும், அக்கறையுடன் செயல்பட வேண்டியது மிக மி அவசியம்.
ஆனால் அந்த வகையில் அலட்சியத்தியத்துடன் செயல்பட்டதால், கேரள மாநிலத்தில், ஒரு பெற்றோர் தங்கள் ஒன்றரை வயது பெண்குழந்தையைப் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. குரவிலங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர்கள் அலல் - சுருதி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ரூத் மரியம் அலல் என்ற குழந்தை இருந்தது.
விளையாட்டு (Sports)
இந்தக் குழந்தை ரூத் மரியம், வீட்டில் தன் விருப்பப்படி விளையாடிக் கொண்டிருந்தது. பிரிட்ஜ்க்கு பின்னால் சென்று ஒளிந்து விளையாட முற்பட்டது. விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பிரிட்ஜில் இருந்து குழந்தை மேல் மின்சாரம் பாய்ந்து குழந்தையைத் தூக்கி வீசியது.
சோகம் (Tragedy)
இதில் படுகாயமடைந்த குழந்தையைப் பெற்றோர்,தூக்கிக்கொண்டு, மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிரிட்ஜில் இருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அதில் எப்போதுமே மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும்.
குழந்தை வளர்ப்பில் கவனம்
இதனைப் பெற்றோர் கவனத்தில் வைத்திருப்பதுடன், குழந்தை என்ன செய்கிறது, எப்படி விளையாடுகிறது என்பதிலும், கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
மேலும் படிக்க...
Share your comments