உயர் கல்வியைத் தொடர இயலாதவர்களுக்கு வேளாண்மைப் பட்டயப் படிப்பில், ஓர் அரிய வாய்ப்பை அளிக்கும் விதமாக மூலிகை அறிவியல் (Herbal Science)பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்த வெளி மற்றும் தொலைத்தூரக்கல்வி இயக்ககம் சார்பில் இந்த பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த பட்டயப்படிப்பைக் கற்பதன் மூலம், பின்வரும் பயன்களை அடைய முடியும்.
அவை
-
மூலிகைப் பயிர்கள் குறித்த தொழில்நுட்ப அறிவு
-
மூலிகைப் பயிர்கள் ஏற்றுமதி குறித்த அறிவு
-
மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் குறித்த தொழில்நுட்ப அறிவு
-
சுய வேலை வாய்ப்பு
-
வேளாண் சார்ந்த நிறுவனங்களில் பணிக்கான வாய்ப்பு
-
தனியார் பண்ணைகளில் மேலாளராக வாய்ப்பு
-
வங்கிகளில் வேளாண் கடன் கிடைக்க வாய்ப்பு
கல்வித் தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி
காலம் - ஓராண்டு (இரண்டு பருவங்கள்)
பயிற்று மொழி - தமிழ்
வயது வரம்பு - 18 வயது பூர்த்தியானவர்கள் / உச்சவரம்பு கிடையாது
நேர்முகப் பயிற்சி வகுப்புகள்
மாதத்திற்கு இரண்டு நாட்கள் அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும். பருவத்திற்கு, 5 மாதங்களில், 10 நேர்முகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
பயிற்சிக் கட்டணம் - ரூ.10,000/ பருவத்திற்கு
பாடத்திட்டங்கள்
முதல் பருவம் (First Semester)
-
இயற்கைச் சூழலில் மூலிகைப் பயிர்கள் விநியோகம் மற்றும் பராமரிப்பு மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் நாற்றங்கால் தொழில்நுட்பம்
-
முக்கிய மூலிகைப் பயிர்கள் வணிக ரீதியில் சாகுபடி
2ம் பருவம் (Second Semester)
-
முக்கிய நறுமணப் பயிர்கள் வணிக ரீதியில் சாகுபடி
-
மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் அறுவடை பின்சார் தொழில்நுட்பம்
-
மூலிகை பொருட்களின் தரக் கட்டுப்பாடு
-
மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல்
-
மேலும் விபரங்களுக்கு
04226611229 /94421 11048/9489051046 என்ற தொலைபேசி எண்களிலும், odl@tnau.ac.in என்ற E-mailலிலும், www.tnau.ac.in என்ற Website-லிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
திசு வளர்ப்பு மூலம் உயர் ரகத் தென்னை - வேளாண்ப் பல்கலைக்கழகம் முயற்சி!
இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி - அதிக மகசூல் பெற 8 யோசனைகள்!
Share your comments