1. செய்திகள்

ரூ.500 நோட்டுகளுக்கு தடையா? ரிசர்வ் வங்கியின் புது அறிவிப்பு!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Reserve Bank

இந்திய ரிசர்வ் வங்கியால் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுகின்றன, இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கி மக்களுக்காக சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த சலுகையை பயன்படுத்தி மக்கள் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறலாம், இந்த புதிய ரூபாய் நோட்டுகள் குறித்த தகவலை பிஎன்பி வங்கி ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்த ட்வீட்டில், பழைய அல்லது சிதைந்த நோட்டுகளை மாற்ற விரும்பினால், இப்போது நீங்கள் இந்த வேலையை எளிதாக செய்யலாம். உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளலாம், இங்கே நீங்கள் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, உங்களிடம் பழைய அல்லது சிதைந்த நோட்டுகள் இருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது வங்கியின் எந்த கிளைக்கும் சென்று பழைய அல்லது சிதைந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். வங்கி ஊழியர் யாராவது உங்கள் நோட்டை மாற்ற மறுத்தால், அது குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ரூபாய் நோட்டின் நிலை மோசமாக இருந்தால், அதன் மதிப்பு குறையும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி கூறியதாவது, எந்தவொரு கிழிந்த ரூபாய் நோட்டின் ஒரு பகுதி காணாமல் போனால் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளைக் கொண்டு நோட்டு ஒட்டப்பட்டு இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ரூபாய் நோட்டில் முக்கியமான சின்னங்களாக விளங்கும் அதிகாரத்தின் பெயர், உத்தரவாதம், உறுதிமொழி விதி, கையொப்பம், அசோக தூண், மகாத்மா காந்தியின் படம், வாட்டர் மார்க் போன்றவை காணாமல் போனால் நீங்கள் கொடுக்கும் நோட்டுகள் மாற்றப்படாது.

நீண்ட காலமாக சந்தையில் புழக்கத்தில் இருந்த பழைய நோட்டுக்களையும் நீங்கள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். மிகவும் எரிந்த நோட்டுகள் அல்லது ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும் நோட்டுகளை நீங்கள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மாற்றிக்கொள்ளலாம். இந்த நோட்டுக்களை வங்கி மாற்றிக்கொள்ளாது மற்றும் இதனை நீங்கள் ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் மாற்றும் நோட்டுக்கள் இயற்கையாகவே சேதமடைந்து விட்டதா அல்லது வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை இந்த நிறுவனங்கள் கண்காணிக்கின்றது.

மேலும் படிக்க:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், அகவிலைப்படி 4% உயர்வு

சிவப்பு அரிசியை சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிடலாமா?

English Summary: Ban on Rs.500 notes? Reserve Bank's new announcement!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.