1. செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்- 4 நாள் வங்கிப் பரிவர்த்தனை கிடையாது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

மே 28 முதல் 31ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. எனவே அதற்கு ஏற்றபடி, பணப் பரிவர்த்தனையை முடித்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோரிக்கை

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டும் என்பதில் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த முடிவைக் கைவிட வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஊழியர்கள் ஸ்ட்ரைக்

அதேநேரத்தில், மத்திய அரசு தனியார்மயமாக்க எடுத்து வரும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மே 30, 31 ஆகிய நாட்களில் ஸ்ட்ரைக் நடத்தப்படும் என வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மே 30, 31 ஆகிய தேதிகளில் ஸ்ட்ரைக் நடைபெறும் என பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பேங்க் ஆஃப் பரோடா. மேலும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மிகப் பழைமை வாய்ந்த பொதுத்துறை வங்கியாகும். இந்நிலையில் இவ்விரு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

ஆதரவு

வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்படி மே 30, 31 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி கிளைகள் மூடப்பட்டு, வங்கி ஊழியர்கள் பேரணி, தர்ணா போன்ற போராட்டங்களில் ஈட்பட இருக்கின்றனர்.

4 நாட்கள்

மே 30, 31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இரண்டு நாட்கள் இயங்காது. அதற்கு முன் மே 28, 29 ஆகிய தேதிகள் நான்காம் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என்பதால் அந்த இரண்டு நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே மே 28 முதல் 31 வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. இதனைக் கருத்தில்கொண்டு, வாடிக்கையாளர்கள் தங்கள் பணப் பரிவர்த்தனையை முன்கூட்டிய முடித்துக்கொள்வது உத்தமம்.

மேலும் படிக்க...

ஆதார் மூலம் வருமானம்… அடடே, சூப்பர் Offer?

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

English Summary: Bank Employees Strike - No 4 day bank transaction! Published on: 24 May 2022, 08:50 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub