இந்தக் கடன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பெற்றோரின் வங்கிக் கணக்கு புத்தகம் நகல் ஆகியவை தேவை.
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் சுய தொழில் தொடங்கும் வகையில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படும். கடன் தொகையில் 20 சதவீதம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும்.
இந்தக் கடன் தொகையை 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோர் குழந்தைகளின் பெற்றோரும், 18 வயதுக்கு மேற்பட்ட தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தக் கடன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பெற்றோரின் வங்கிக் கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:
468 மது கடைகள் மூடல், சரக்கு மது பிரியர்கள் கடும் அவதி
PM Awas Yojana திட்டத்தில் வீடு யாருக்கு கிடைக்கும், வெளியான பட்டியல்
Share your comments