1. செய்திகள்

6 நாட்கள் வங்கிகள் முடக்கம்! எப்போதிலிருந்து? ஏன்?

Deiva Bindhiya
Deiva Bindhiya

Banks freeze for 6 days! Since when? Why?

டிசம்பர் மாதம் முடிந்து புத்தாண்டு தொடங்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே மிதம் உள்ளன. இந்நிலையில், பரவி வரும் ஒமிக்ரான் பயத்தால், தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது. அதனையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கி ஊழியர்களுக்கு, விடுமுறை பட்டியலை அறிவித்திருக்கிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இதனால் பொதுமக்களின் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும்.

ஏனென்றால், நாம் இயல்பு வாழ்க்கையில் வங்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு, இந்நிலையில் வங்கிகளின் நீண்ட கால விடுமுறை சாதரண மக்கள் முதல் தோழிலதிபர்கள் வரை பாதிக்கப்படலாம். எனினும், ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம், இந்த சேவையில் எந்தவொரு இடையூறும் வராது. இருப்பினும், வங்கிக்குச் சென்று, வேலையை செய்ய வேண்டும் என ஏதேனும் திட்டம் இருந்தால், வங்கிகள் இருக்குமா இல்லை விடுமுறையா என்று தெரிந்துகொண்டு செல்வது நல்லது.

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்னும் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. சில இடங்களில், அதாவது பிராந்திய அளவில் மட்டுமே விடுமுறை இருக்கும். உதாரணமாக, யூ கியாங் நங்பா பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 30ஆம் தேதி சில்லாங் பகுதியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதே பண்டிகைக்காக இமாச்சலப் பிரதேசம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.

எனவே பிராந்திய அளவில், மாநில அளவில் வங்கி விடுமுறை பட்டியல் மாறுபடும். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலின் விவரம் கீழே காணுங்கள்,

டிசம்பர் 24

கிறிஸ்துமஸ் (Christmas Eve)

டிசம்பர் 25

கிறிஸ்துமஸ்

டிசம்பர் 26

ஞாயிறு

டிசம்பர் 27

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

டிசம்பர் 30

யூ கியாங் நங்பா

டிசம்பர் 31

புத்தாண்டு தொடக்கம் (New Year’s Eve)

வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதன்படி திட்டமிட்டு பணப் பரிவர்த்தனை மேற்கொண்டால் வீண் அலைச்சலை தவிர்த்திடலாம்.

மேலும் படிக்க:

அரசு அறிவிப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்கள்

English Summary: Banks freeze for 6 days! Since when? Why?

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.