தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை - 2023 - 2024 இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு – (Bachelor of Education - B.Ed.,) சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed.,) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250/- மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking/UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai 15” என்ற பெயரில் 01.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மேலும் படிக்க: டிராக்டர் வாங்க 35% மானியம்
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
- இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கிய நாள் - 01.09.2023
- இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் - 11.09.2023
தொடர்பு எண்கள்: 93634 62070, 93634 62007, 93634 62042, 93634 62024
எனவே, இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு படிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பிணையும் படிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க:
ஆழ்துளை கிணறு அமைக்க 50 விழுக்காடு மானியத்துடன் கடன் திட்டம்: பயன்பெற அழைப்பு!
Share your comments