1. செய்திகள்

100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரமானது புவனேஷ்வர்!

R. Balakrishnan
R. Balakrishnan
10% Vaccine
Credit : Dinamalar

புவனேஷ்வரில் 18 வயதை கடந்த அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி (100% Vaccine) செலுத்திய முதல் இந்திய நகரம் என்னும் சாதனையை படைத்துள்ளது.

100% தடுப்பூசி

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய நகரமானது. இதுதவிர புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதல் தவணை கோவிட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-க்கு எதிராக 100 சதவீதம் மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதோடு புவனேஷ்வரில் உள்ள சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஜூலை 31ம் தேதிக்குள் புவனேஷ்வரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயித்தோம், அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு 2வது தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தி விட்டோம். இதில் 31 ஆயிரம் சுகாதார ஊழியர்கள், 33 ஆயிரம் முன்களப் பணியாளர்கள், 18 முதல் 45 வயதுடையோர் 5.17 லட்சம் பேர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 3.2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூலை 30ம் தேதி வரை 18.35 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று
புவனேஷ்வர் மாநகராட்சி உதவி கமிஷனர் அன்ஷுமன் ராத் கூறினார்.

தடுப்பூசி மையங்கள்

100 சதவீதம் என்ற இலக்கை எட்ட நகரம் முழுதும் 55 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 30 மையங்கள் இயக்கப்பட்டன. அதே போல் நடமாடும் தடுப்பூசி மையங்களும் நகரம் முழுதும் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர பள்ளிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக நோய் தடுப்பாற்றல் மையங்கள் 15 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன.

மேலும் படிக்க

அம்மை நோய் போல எளிதாக பரவும் டெல்டா வைரஸ்: ஆய்வில் தகவல்!

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!

English Summary: Bhubaneswar was the first Indian city to vaccinate 100% of its population! Published on: 02 August 2021, 09:16 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.