அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். அதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் தெரிவித்தப்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் அரசாணையின் படி, 3,688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7,728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக,15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த முறை, முதற்கட்டமாக, பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல் படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share your comments