தமிழகத்தில், நான்கு மாவட்டங்களில், பாரம்பரிய முறையிலான, பல்லுயிர் பரவல் குழுக்கள் அமைக்க, மத்திய அரசின், தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத்திடம், அனுமதி கோரப்பட்டுள்ளது.தமிழகத்தில், வனப் பகுதிகளை பாதுகாப்பது போன்று, உயிரின வளங்களை பாதுகாப்பதற்காக, மாநில பல்லுயிர் பரவல் வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
'பயோ டைவர்சிட்டி' எனப்படும், பல்லுயிர் பரவல் தொடர்பான, மத்திய அரசின் திட்டங்கள், வழிகாட்டுதல்கள் அடிப்படையில், உயிரின வளங்களை பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, தமிழகத்தில், 15 இடங்களில், பல்லுயிர் பரவல் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக, திருவாரூர் மாவட்டம் - குடியம், திருவண்ணாமலை மாவட்டம் - குள்ளர் குகை, நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை, கடலுார் மாவட்டம் - சேந்திராங்கிள்ளை ஆகிய நான்கு இடங்களில், பல்லுயிர் பரவல் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Share your comments