1. செய்திகள்

ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை: அழியும் தருவாயில் பத்து லட்சம் உயிரினங்கள்: நவீனமயமானத்தின் விளைவு

KJ Staff
KJ Staff

இந்த பூமியானது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல என்பதினை அறியதினால் வந்த விளைவு, பத்து லட்சம் உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இந்த நவீன யுகத்தில் நாம் பலவற்றை இழந்து வருகிறோம். இந்த உயிரினங்களின் அழிவு மனித குலத்திற்கு ஆபத்தானது என  ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விளை நிலங்கள், காடுகள் இவற்றை எல்லாம் அழித்து மனிதனின் தேவைக்காக நவீன குடியிருப்புகள், வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, போன்ற காரணங்களால் பூமி வெப்பமயமாகி  வருகிறது. இந்த பூமியில் பல்லாயிரக்கணக்கான செடிகள், மரங்கள், விலங்குகள்,கடல் வாழ் உயிரினங்கள் என எண்ணற்ற உயிரினங்கள்  வாழ்ந்து வருகிறது.

சமீபத்தில் உலக அளவில் ஏற்படும் மாற்றம், பொருளாதார சரிவு, இவையாவும் எதிர் கால மனித குலத்திற்கு பாதகமானது என ஆய்வாளர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதனை உலக நாடுகள் அனைத்தும் ஆமோதித்துள்ளது.  50 நாடுகளை சேர்த்த, 140 ற்கும்  அதிகமான அறிவியல் விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள், என பல்துறை வல்லுனர்களும் உயிர்சூழல் குறித்து ஒரு அறிக்கையினை வெளிட்டுள்ளனர். பேராசிரியர் ஜோசப் சித்தல் தலைமையில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.

8 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள், பவள பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள், முலிகை செடிகள், பறவைகள், விலங்குகள் என பத்து லட்சத்திற்கு அதிகமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித சமூகத்திற்கு வைக்கும் வேண்டுகோளாக, இனியேனும் விழித்து கொள்ள வேண்டும். இருக்கும் வளத்தினையும், உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று பேராசிரியர் ஜோசப் சித்தல் கேட்டு கொண்டார்.    

English Summary: Biodiversity War: 10 lakh Spices Under Risk: Human Activity Disturb The Ecosystem Published on: 10 May 2019, 10:49 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.