1. செய்திகள்

பறவை காய்ச்சல் - கோழிப்பண்ணைகளை கண்காணிக்க 45 படை

T. Vigneshwaran
T. Vigneshwaran
Bird Flu

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டிருப்பதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளை கண்காணிக்க 45 அதிவிரைவு படை அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு உள்ளதை தொடர்ந்த உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணையாளர்களையும் பண்ணையின் நுழைவுவாயிலில் ‘புட்பாத்’ அமைத்து அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமிநாசினி கலவை கலந்து வைக்க வேண்டும்.

உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 45 அதிவிரைவுபடை அமைத்து கோழிப்பண்ணைகளை கண்காணித்து வர அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளிசெல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் இறப்பு ஏற்படின் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழி மற்றும் கோழியின பொருட்கள் போக்குவரத்தினை அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவும், பறவைகள் சரணாலயம், வனங்கள் மற்றும் நீர் இருப்பு பகுதிகளில் ஏற்படும் அசாதாரணமான இறப்புகளை உடனுக்குடன் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நச்சுக்கொல்லி மற்றும் உபகரணங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்டத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

பித்ரு தோஷம் நீங்க தஞ்சாவூரில் வழிபட வேண்டிய கோவில்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு

English Summary: Bird flu - 45 force to monitor poultry farms Published on: 04 November 2022, 06:19 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.