BJP Annamalai
நேற்று அவரது உடல் தனி விமான மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசினர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நம் இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி காங்கிரஸ் மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் அங்குள்ள வ. உ. சிதம்பரனாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘ பாஜக ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது. மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது காட்டுமிராண்டிதனமான செயலாகும்.
அமைச்சர் என்றில்லை தனி மனிதர் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடத்தக் கூடாது. ஒரு கருத்தை மாற்றுக் கருத்தால் தான் எதிர் கொள்ள வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும். நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ஆனால் ஆளுநருக்கென்று சில வரைமுறைகள் உள்ளது. அதை அவர் பின்பற்ற வேண்டும். ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, ஆளுநர் அரசியல் பேச கூடாது’ என்று பேசினார்.
மேலும் படிக்க
Share your comments