வரும் நவம்பர் 4 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் தீபாவளி (Diwali Festival) பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் அதாவது தீபாவளி அன்று வியாழக்கிழமை என்பதால் கூடுதலாக ஒருநாள் (வெள்ளிக்கிழமை) விடுப்பு எடுத்தால் 4 நாட்கள் விடுமுறையாக இருக்கும். தீபாவளி பொங்கல் போன்ற பெரிய பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
விடுமுறைக்கு செல்வதற்கு பலர் ரயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு ரயில் முன் பதிவு செய்வது குறித்த அறிவிப்புக்காக சிலர் காத்திருக்கின்றனர். ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பேருந்துகளில் செல்வார்கள். இதன் காரணமாக தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை வழங்கவுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3ம் தேதி மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்காக டிஎன்எஸ்டிசி என்கிற அரசு செயலி மற்றும் தனியாா் போக்குவரத்து செயலிகள் மற்றும் ஆன்லைன் வழியாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது தென் மாவட்டங்களுக்குசெல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் போன்ற வசதிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில், விரைவில் தீபாவளி சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடர்பாக அறிவிப்புக்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments