கொரோனா வைரஸால் உலகமே நடுங்கிய நிலையில், தடுப்பூசிகளின் வரவால் தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி இரண்டாவது 'டோஸ்' மற்றும் 'பூஸ்டர் டோஸ்' போடுவதற்கான காலத்தை ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்' என 'சீரம்' நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
தடுப்பூசி (Vaccine)
'கோவிஷீல்டு' தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா கூறியதாவது: கொரோனா வைரசின் உருமாறிய வகைகள் புதிது புதிதாக வருகின்றன. இதையடுத்து மக்களின் பாதுகாப்பிற்காக கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான இடைவெளியை தற்போதைய ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும்.
இதேபோல 'பூஸ்டர்' தடுப்பூசிக்கான இடைவெளியும் ஒன்பது மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும். பல நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது. இதனால் வெளிநாடு செல்வோர் தேவையின்றி காத்திருப்பது தவிர்க்கப்படும், என்றார்.
புதிது புதிதாக உருமாறி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை, பாதுகாப்பாக எதிர்கொள்வதே நமக்கு இருக்கும் ஒரே வழி. அவ்வழிக்கு தடுப்பூசி தான் துணை.
மேலும் படிக்க
Share your comments