Breakfast Will Be Served To Government School Students
முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பள்ளி திறக்கும் நாளில் இத்திட்டம் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை. திட்டம் தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படும்.
அவர்கள் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் கொடுக்கப்படும். 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். இதில் மாற்றம் இருக்காது. சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறாது என்று கூறினார்.
மேலும் படிக்க
Share your comments