பாராலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 'ரீகர்வ்' பிரிவில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் கைப்பற்றினார்.
ஜப்பானில் நடக்கும் டோக்கியோ பாராலிம்பிக் ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரீகர்வ்' ஓபன் பிரிவு 'ரேங்கிங்' போட்டியில் 600 புள்ளிகளுடன் 21வது இடம் பிடித்த இந்தியாவின் ஹர்விந்தர் சிங், முதலிரண்டு சுற்றில் இத்தாலியின் ஸ்டெபானோ டிராவிசனி (6-5), ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் படோ (6-5) ஆகியோரை வீழ்த்தினார்.
முதல் பதக்கம்
பின், காலிறுதியில் 6-2 என ஜெர்மனியின் மாய்க் ஸ்ஜார்ஸ்செவ்ஸ்கியை வீழ்த்திய ஹர்விந்தர், அரையிறுதியில் 4-6 என, அமெரிக்காவின் கெவின் மதரிடம் வீழ்ந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எழுச்சி கண்ட ஹர்விந்தர் 6-5 என, தென் கொரியாவின் சு மின் கிம்மை தோற்கடித்தார். இதன் மூலம் பாராலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
புதிய சாதனை
இந்தியாவின் பிரவீன் குமார் கிரேட் பிரிட்டனின் ஜொனாதன் ப்ரூம்-எட்வர்ட்ஸை பின்னுக்குத் தள்ளி 2.07 மீ தாண்டி, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்தார்.
பிரவீன் குமார் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில், T64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதை அடுத்து டோக்கியோவில் நடந்து வரும் விளையாட்டுகளில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 18 வயதான குமார், தனது முதல் பாராலிம்பிக் போட்டிகளில், கிரேட் பிரிட்டனின் ஜொனாதன் ப்ரூம்-எட்வர்ட்ஸை பின்னுக்குத் தள்ளி 2.07 மீட்டர் தாண்டி, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்தார்.
பாராலிம்பிக் போட்டியில் இது வரையில் இந்தியா இரண்டு தங்கம் 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் இன்று (3 ம் தேதி) ஒரே நாளில் மூன்று பதக்கங்ளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share your comments