1. செய்திகள்

பட்ஜெட் 2022: வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்காக, புதிய அலோவன்ஸ், வழங்க வாய்ப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya

Budget 2022: Chance to Announce new allowances for work from home

கோவிட் தொற்றுநோயால், நாட்டில் பல விஷயங்கள் மாறிவிட்டன, என்பது அனைவரும் அறிந்ததே. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள் என பலவும் வீட்டில் இருந்தே இயங்கும் காலமாகும். மாணவர்களின், கோரிக்கை ஏற்று தேர்வுகளும், வீட்டில் இருந்து எழுத உத்தரவு வந்துவிட்டது. ஆனால் அலுவலகம், பள்ளி, கல்லூரி தரும் மற்ற வசதிகளை, நீங்கள் வீட்டில் பெற முடியாது. அந்த வகையில், வீட்டில் இருந்து பணிபுரியும் பணியாளர்களுக்கு, பட்ஜெட்டில் புதிய அலோவன்ஸ்-க்கான வாய்ப்புள்ளது.

'வீட்டிலிருந்து வேலை' (Work From Home) என்ற போக்கு அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு பல வகையான செலவுகள் அதிகரித்துள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.

இணையம், தொலைபேசி, காஜெட்டுகள், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றில் மிகப்பெரிய தாக்கம் காணப்படுகிறது.

பட்ஜெட்டில் இதற்கான நிவாரணம் கிடைக்குமா? (Will there be relief for this in the budget?)

கொரோனா தொற்றுநோய்க்கு முன், இதுபோன்ற செலவுகள் பற்றிய கவலை இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த பட்ஜெட்டில், 'வொர்க் ஃப்ரம் ஹோம்' செய்பவர்களுக்கு, பெரிய நிவாரணம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, யூனியன் பட்ஜெட்டில், சம்பளம் வாங்குபவர்களுக்கு, சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் இந்த பட்ஜெட்டில் சம்பளம் வாங்கும் வேலை பார்ப்பவர்களுக்கு பல ஆதாயங்கள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர், மக்கள்.

சமீபத்தில் டெலாய்ட் இந்தியா, வரி சேவைகள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனம், வேலை செய்யும் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை வழங்க வேண்டும் என்று கோரியது. எனவே, வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் மக்களின் தேவையும் அதிகரித்திருப்பது உண்மையாகும்.

அரசால் நேரடியாக உதவித்தொகை வழங்க முடியாவிட்டால், வருமான வரியிலாவது விலக்கு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள வேலைக் கலாச்சாரத்தை சுட்டிக்காட்டும் டெலாய்ட், வீட்டில் இருந்து வேலை செய்வதன் நன்மைகளை பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளது.

ஐசிஏஐயும் இதே போன்ற பரிந்துரைகளை வழங்கியுள்ளது (ICAI has made similar recommendations)

டெலாய்ட் இந்தியாவின், கோரிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிசீலித்தால், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை வீட்டுப் படியாக வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமும் (ICAI) பட்ஜெட் தொடர்பாக இதே போன்ற பரிந்துரைகளை செய்துள்ளதிருக்கிறது.

நிலையான விலக்கு அதிகரிக்க வாய்ப்பு (Possibility to increase fixed exemption)

வரி செலுத்துவோருக்கு நிலையான விலக்கில் சலுகை வழங்குவதற்கான வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும் ஐசிஏஐ கோரியிருக்கிறது. தற்போது, ​​வருமான வரியின் கீழ் நிலையான விலக்கு வரம்பு ரூ. 50,000 ஆகும். இதை ரூ.1 லட்சமாக உயர்த்த கோரிக்கை எழுந்திருக்கிறது.

வருமான வரியின் 10வது பிரிவின் கீழ் வரி செலுத்துவோருக்கு சில விலக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த விதி மிகவும் பழமையானதாகும்.

எனவே பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, 50 ஆயிரம் என்ற வரம்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, ஸ்டாண்டர்ட் டிஸ்கஷன் வரம்பை, 50 ஆயிரத்தில் இருந்து, ஒரு லட்ச ரூபாயாக உயர்த்த, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

2022 பட்ஜெட்டும் டிஜிட்டல் முறையில் தாக்கல், எவ்வாறு நடக்கும் இந்த பணி?

ஜனவரி 30 வரையிலான வானிலை அறிக்கை! கீழடுக்கு சுழற்சியே காரணம்!

English Summary: Budget 2022: Chance to Announce new allowances for work from home People!

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.