மத்திய பட்ஜெட், நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: மக்களுக்கு உகந்த மற்றும் வளர்ச்சிக்கு உகந்த பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுகள்.
பட்ஜெட் (Budjet)
பட்ஜெட் குறித்து நாளை(பிப்ரவரி 2) காலை 11 மணிக்கு விரிவாக பேசுகிறேன். மத்திய பட்ஜெட், இந்தியாவின் எதிர்கால தேவையைபூர்த்தி செய்கிறது. இந்தியாவின் இளைஞர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சாமானிய மனிதர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
அனைத்து தரப்பு மக்களும், துறையினரும் வரவேற்கின்றனர். நாட்டின் உடனடி தேவைகளை தீர்த்து வைப்பதாக அமைந்துள்ளது. ஏழை மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் இது. இது அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட். நமது பாதுகாப்பு துறைக்கு மிகப்பெரிய சக்தி கிடைக்கும். விவசாயிகளின் நலனுக்கு மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளின் நலனை பாதுகாத்துள்ளோம். போக்குவரத்து துறைக்கு பெரிய உற்சாகமளிக்கிறது.
மத்திய பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சியில் புதிய நம்பிக்கையை கொண்டுள்ளது. அதிக வளர்ச்சி, அதிக முதலீடு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏழைகளுக்க கான்கிரீட் வீடு குழாய் மூலம் குடிநீர், கழிவறை வசதி கிடைக்கும். இண்டர்நெட், டிஜிட்டல் மயம் குறித்து கவனம் செலுத்துகிறது. உ.பி., உத்தர்கண்ட், ஜார்க்கண்ட், மே வங்க மாநிலங்களில் கங்கை நதிக்கரைகளில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் கங்கை நதி ரசாயன கழிவுகளில் இருந்து காக்கப்படும்.
மேலும் படிக்க
சென்னை மெட்ரோவை 118.9 கிமீ விரிவுப்படுத்த ரூ. 63,000 கோடி ஒதுக்கீடு! மேலும் பல அறிவிப்புகள்!
ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு!
Share your comments